ரெயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை
x

ரெயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை

திருப்பூர்

திருப்பூர்,

திக்குவாய் பிரச்சினையால் மனம் உடைந்து பள்ளி மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவன் தற்கொலை

திருப்பூர் 2-வது ரெயில்வே கேட் அருகே நேற்றுமுன்தினம் தண்டவாளத்தில் 17 வயது மதிக்க தக்க சிறுவன் ஒருவன் இறந்து கிடந்தான். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். ஆனால் தற்கொலை செய்த சிறுவனின் விவரம் தெரியவில்லை. ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் தற்கொலை செய்தது திருப்பூர் பலவஞ்சிப்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த கணேசனின் மகன் விமல்ராஜ் (வயது 17) என்பதும், 11-ம் வகுப்பு மாணவன் என்பதும் தெரியவந்தது.

உருக்கமான கடிதம் சிக்கியது

விசாரணையில், விமல்ராஜூக்கு திக்குவாய் இருந்துள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லையே என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளான். இந்தநிலையில் தனது திக்குவாய் குறித்து மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வீட்டில் வைத்து விட்டு விமல்ராஜ் தண்டவாளத்தில் ரெயில் முன் படுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story