தாளாப்பள்ளி மலைப் பகுதியில் பாறை ஓவியங்களை மாணவிகள் ஆய்வு


தாளாப்பள்ளி மலைப் பகுதியில் பாறை ஓவியங்களை  மாணவிகள் ஆய்வு
x
தினத்தந்தி 19 Jun 2023 12:30 AM IST (Updated: 20 Jun 2023 12:09 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான அருங்காட்சியகவியல் மற்றும் தொல்லியல் உள்விளக்க பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி, பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரி, மற்றும் ஊத்தங்கரை அதியமான் கல்லூரிகளில் முதுகலை 2-ம் ஆண்டு தமிழ் படிக்கும் மாணவிகள் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் பாறை ஓவியங்களை கொண்ட தாளாப்பள்ளி மலைப்பகுதிக்கு மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு ஏரிக்கரை அருகே அமாவாசை குண்டு என்ற பாறையில் உள்ள 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெண்சாந்து பாறை ஓவியங்கள் பற்றி மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்பு அந்த மலையின் மற்றொரு பகுதியில் இருட்டு கவி என்ற இடத்தில் இருக்கும் பாறை ஓவியங்களை பார்வையிட்டு அதன் விளக்கங்களை அருங்காட்சிய காப்பாச்சியர் கோவிந்தராஜ் அளித்தார். அதன் அருகே அனுமன் கோவில் பின்புறம் உள்ள பாறை ஓவியங்கள், அதற்கு அருகே உங்ள முனீஸ்வரன் கோவில் பாறையின் குகை போன்ற பாறை ஓவியமும் மாணவிகளுக்கு காட்டப்பட்டது.

இந்த பயணத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன்உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story