மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
குத்தாலம் அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்:
குத்தாலம் அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வகுப்பை புறக்கணித்து போராட்டம்
குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது.இந்த கல்லூரியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த கல்லூரியில் உரிய கட்டிட வசதி, போதிய ஆசிரியர்கள் இல்லை எனவும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பயணிகள் நிழலகம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் தாசில்தார் கோமதி, மயிலாடுதுறை ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், குத்தாலம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம், மண்டல துணை தாசில்தார் சுந்தர், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றுபேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக மாபெரும் போராட்டம் நடத்துவோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.