திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்-கண்டக்டரை தாக்கிய பள்ளி மாணவர்கள்


திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்-கண்டக்டரை தாக்கிய பள்ளி மாணவர்கள்
x

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை பள்ளி மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு இன்று காலை சுமார் 8.45 மணிக்கு, கன்னிவாடியில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. காலை நேரம் என்பதால் பஸ் நிலையத்தில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் நின்றனர். அப்போது கன்னிவாடியில் இருந்து வந்த அரசு டவுன் பஸ்சை உரிய இடத்தில் நிறுத்துவதற்கு டிரைவர் திருப்பினார். அங்கு பள்ளி மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

இதனால் பள்ளி மாணவர்களை விலகி நிற்கும்படி கண்டக்டர், டிரைவர் கூறியதாக தெரிகிறது. அப்போது கண்டக்டர், டிரைவர் மற்றும் மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், மேலும் சிலருடன் சேர்ந்து டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். அதை பார்த்த சக டிரைவர்-கண்டக்டர்கள் மற்றும் பயணிகள் அங்கு திரண்டு வந்தனர்.

இதையடுத்து மாணவர்கள் அங்கு இருந்து ஓடிவிட்டனர். திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை பள்ளி மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story