மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x

நாகை அரசு கல்லூரியை சுற்றிதேங்கியுள்ள மழை நீரை அகற்றக்கோரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை அரசு கல்லூரியை சுற்றித்தேங்கியுள்ள மழை நீரை அகற்றக்கோரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு கல்லூரி

நாகை செல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக இந்த கல்லூரி வாசல் மற்றும் கல்லூரியை சுற்றிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.

ஆர்ப்பாட்டம்

இந்த மழை நீரை அகற்றக்கோரியும், கல்லூரியில் கழிவறை, குடி உள்ளிட்ட வசதிகள் செய்து தரக்கோரியும் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரியை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும்.

கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர் போராட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகமாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.


Next Story