பள்ளிகளுக்கு ஆர்வமுடன் சென்ற மாணவ-மாணவிகள்


பள்ளிகளுக்கு ஆர்வமுடன் சென்ற   மாணவ-மாணவிகள்
x

அரையாண்டு விடுமுறை முடிந்ததைத்தொடர்ந்து தஞ்சை பகுதிகளில் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் சென்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

அரையாண்டு விடுமுறை முடிந்ததைத்தொடர்ந்து தஞ்சை பகுதிகளில் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் சென்றனர்.

அரையாண்டு விடுமுறை

தமிழகத்தில் அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடந்து முடிந்தன. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கி 23-ந்தேதி வரை தேர்வுகள் நடந்தது. மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்வுகள் முடிந்ததை தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை தொடர்விடுமுறை வழங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை, உற்சாகமாக கொண்டாடும் விதத்தில் பண்டிகைகளும் தொடர்விடுமுறையின் போது வந்தன.

பள்ளிகள் திறப்பு

இந்த நிலையில் நேற்று அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. தஞ்சை பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் சென்றனர். இதனால் நேற்று காலை புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையத்துக்கு வந்த பஸ்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.தொடர்விடுமுறையால் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது பள்ளி நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்ததால் மாணவ-மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மாணவர்கள் முககவசம் அணிந்து வரும்படி ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.


Next Story