அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும்(ஐ.டி.ஐ.), அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 2022-23-ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவ-மாணவிகள் வருகிற 20-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட அரசு ெதாழிற்பயிற்சி நிலையங்களிலும் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கணினி மையம் மூலமும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
கட்டணம்
இதற்கான கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆண்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பக் கட்டணம் ரூ.50-ஐ டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், ஜி பே வாயிலாக செலுத்த வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை gitiperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9499055881, 8072345080 என்ற செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை gitialathurperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9499055884 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்களை dstoperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9488451405 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 9499055877 என்ற செல்போன் எண்ணிலும், 04329-228408 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 9499055879, 9499055880 என்ற செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.