திருக்குறள் முற்றோதல் பரிசுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


திருக்குறள் முற்றோதல் பரிசுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

திருக்குறள் முற்றோதல் பரிசுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

ஒவ்வொரு ஆண்டும் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ.10,000 வீதம் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 2022 -23 ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ஏ பிளாக் கட்டிடத்தில், 4-ம் தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்்சித் துணை இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0416-2256166 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர், போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும். அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கு பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.


Next Story