என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
கொள்ளிடம் அருகே உள்ள சீனிவாசா சுப்புராய அரசு தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புத்தூர் சீனிவாசா சுப்பராய அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் என்ஜினீயரிங் படிப்பிற்கு மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைன் பதிவு வசதி மாவட்டத்திலேயே இங்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் உயர்கல்வித்தறை மற்றும் தொழில்நுட்ப கல்வி துறையின் கீழ் உள்ள அனைத்து என்ஜினீயர் கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடர்பான ஆன்லைன் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பணி இங்கு தொடங்கப்பட்டுள்ளது. புத்தூர் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 20-ந்தேதி முதல் தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின் அடிப்படையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு என்ஜினீயர் மாணவர்கள் 2022-23-ம் ஆண்டு சேர்க்கை ஆன்லைன் பதிவு வசதி மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த இலவச இணையதள மையத்தை பயன்படுத்தி விண்ணப்ப பதிவேற்றத்தினை மேற்கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு்ள்ளது.