ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்
ஆசிரியர் தினத்தையொட்டி, பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மாணவ-மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
கூடலூர்,
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூடலூர் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ஐயப்பன் உள்பட ஆசிரியர்களுக்கு மாணவ-மாணவிகள் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை கூறினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் ஹெல்த் கேம்ப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மோகன் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீமதுரை, புத்தூர் வயல், புளியாம்பாரா, பார்வுட், மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
கூடலூர் அருகே தேவாலா அட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொறுப்பாசிரியர் விஜயா உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தியாகராஜா உள்பட பெற்றோர், மாணவர்கள் கலந்துகொண்டனர்.