காமராஜர் வேடம் அணிந்து வந்த மாணவர்கள்


காமராஜர் வேடம் அணிந்து வந்த மாணவர்கள்
x

காமராஜர் வேடம் அணிந்து மாணவர்கள் வந்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, மலர்கொடி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் செயலர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெஸி சாந்தாராணி வரவேற்றார். காமராஜரின் 121-வது பிறந்தநாளை போற்றும் வகையில் 121 மாணவர்கள் காமராஜர் வேடமிட்டு மங்காபுரம் பகுதியில் பேரணியாக வந்தனர்.

பின்னர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பாலையம்பட்டியில் உள்ள மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் வெள்ளத்துரை, விரிவுரையாளர் இளங்கோ, படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், ஆசிரியர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பின்னர் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து மாணவ-மாணவியருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மங்காபுரம் இந்து நாடார் உறவின் முறைத் தலைவர் குருசாமி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.


Next Story