பள்ளிக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த மாணவர்கள்
சிதம்பரத்தில் பள்ளிக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த மாணவர்கள் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
கடலூர்
சிதம்பரம்
சிதம்பரத்தில் சில மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு ரதவீதியில் சுற்றித்திரிந்த பள்ளி மாணவர்கள் சிலரை போலீசார் பிடித்து பச்சையப்பன் அரசு பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களுக்கு அறிவுரை வழங்கி வகுப்பறையில் கொண்டு விட்டு சென்றனர்.
Related Tags :
Next Story