மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்பணி நிறைவு பெற்ற ஆசிரியரை நூதன முறையில் கவுரவித்த மாணவர்கள்மேளதாளம் முழங்க சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்
சேலம்
மேட்டூர்
மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் பாடப்பிரிவின் முதுநிலை ஆசிரியர் கு.பாரி. பணி நிறைவு பெற்ற அவருக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பணி நிறைவு விழா முடிவடைந்தவுடன், அவரை வீட்டுக்கு செல்ல மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் நூதனமான ஒரு ஏற்பாட்டை செய்து இருந்தனர். அதாவது, ஆசிரியர் பாரி, அவரது மனைவியை பள்ளி வளாகத்தில் இருந்து 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் மேளதாளங்கள் முழங்க அவருடைய இல்லத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது மாணவ- மாணவிகளுக்கு தங்கள் ஆசிரியர்கள் மீது எவ்வளவு மதிப்பு மரியாதை வைத்துள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story