மாணவர்கள் விடுதி திறப்பு விழா
ஊத்தங்கரையில் மாணவர்கள் விடுதி திறப்பு விழா நடந்தது.
ஊத்தங்கரை:-
ஊத்தங்கரை இந்திராநகரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 100 மாணவர்கள் தங்கும் வகையில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதை கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று திறந்துவைத்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் உஷாராணி, ஒன்றிய குழு துணைத்தலைவர் சத்தியவாணி, பேரூராட்சி தலைவர் அமானுல்லா, பேரூராட்சி துணைத்தலைவர் கலைமகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரஜினி செல்வம், ஜெயமணி, மணிகண்டன், சின்னத்தாய், முருகேசன், ஜெயராமன், விஜயகுமார், தாசில்தார் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமரன், சிவப்பிரகாசம், பேரூராட்சி செயல் அலுவலர் சேம்கிங்ஸ்டன், தி.மு.க நகர அவைத் தலைவர் தணிகை குமரன், விடுதி காப்பாளர் சுரேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.