மாணவர்கள் வாழ்க்கையில் உயர சிறப்பாக கல்வி கற்க வேண்டும்
மாணவர்கள் வாழ்க்கையில் உயர சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என முதன்மை வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் ராஷ்மி சக்சேனா சாஹ்னி கூறினார்.
மாணவர்கள் வாழ்க்கையில் உயர சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என முதன்மை வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் ராஷ்மி சக்சேனா சாஹ்னி கூறினார்.
மாணவர்களுக்கு போட்டிகள்
வருமான சுதந்திரத்திருநாள் அமுத திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு எனது இந்தியா கடந்த 75, அடுத்த 25, பள்ளி மாணவர்கள் பார்வையில் என்ற தலைப்பில் கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவிய போட்டிகள் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில் வேலூர் மாநகரை சுற்றியுள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
விழாவில் முதன்மை வருமான வரித்துறை தலைமை ஆணையர் ராஷ்மி சக்சேனா சாஹ்னி கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
சிறப்பாக கல்வி கற்க வேண்டும்
மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது பிறந்த நாளில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பள்ளி படிப்பு முடியும் வரை பராமரிக்க வேண்டும். காட்பாடி அரசு ஆண்கள் பள்ளி மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் உயர சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்றார்.
விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில வருமான வரித்துறை ஆணையர் ரவி ராமச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். கூடுதல் வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் சிறப்புரையாற்றினார்.
விழாவில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி வாழ்த்தி பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வரன் பிள்ளை, வேலூர் வருமான வரித்துறை அலுவலர்கள் பூரன்சந்த், மீனா, ஒருங்கிணைப்பாளர்கள் சிவ வடிவு, பழனி, ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், சேர்க்காடு பள்ளி தலைமை ஆசிரியை பேபி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டு அதனை பராமரிப்பதாக உறுதி எடுத்துக் கொண்டனர். முடிவில் வேலூர் வருமான வரித்துறை அலுவலர் பட்டாபிராமன் நன்றி கூறினார்.