கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x

கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

திருவெறும்பூர்:

திருவெறும்பூரை அடுத்த துவாக்குடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் மார்க்சியா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் ஜி.கே.மோகன், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சூரியா ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, அந்த டாஸ்மாக் கடையால் அப்பகுதி மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும்போது, அவர்களை மது போதையில் இருப்பவர்கள் கேலி செய்வது, தரக்குறைவான வார்த்தைகளை கூறி சண்டையிடுவது, மது அருந்திவிட்டு திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போதையில் படுத்து கிடப்பது மற்றும் கல்லூரியின் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து மது அருந்துவது என தொந்தரவு செய்வதால், அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் ஹரி, ராமச்சந்திரன், ஆமோஸ், அபி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் மகா நன்றி கூறினார்.


Next Story