தேசிய கராத்தே போட்டியில் திண்டுக்கல் மாணவர்கள் சாதனை


தேசிய  கராத்தே போட்டியில் திண்டுக்கல் மாணவர்கள் சாதனை
x

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திண்டுக்கல் மாணவர்கள் சாதனை படைத்தனர்.

திண்டுக்கல்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 20-வது தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் நடந்தது. கடந்த 7-ந்தேதி நடந்த இப்போட்டியில் ஆந்திரா, உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் திண்டுக்கல்லில் இருந்து 28 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். போட்டியில் சிறப்பாக விளையாடிய திண்டுக்கல் வீரர்கள் பரிசுகளை குவித்தனர். குறிப்பாக கட்டா என்னும் தனிப்பிரிவில் 2 பேர் முதலிடம் பிடித்தனர். 4 வீரர்கள் 2-வது இடம் பிடித்தனர். 19 பேர் 3-வது இடம் பிடித்து அசத்தினர். குமிதே பிரிவில் ஒருவர் 2-வது இடம் பிடித்தார். வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையொட்டி திண்டுக்கல் திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி பங்கேற்று வீரர்களை பாராட்டி பரிசு வழங்கினார். இதில் கராத்தே பயிற்சியாளர் ராஜகோபால், கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story