பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான பயணம்


பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:45 AM IST (Updated: 17 Nov 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் படிக்கட்டிலும், பின்பக்க ஏணியிலும் தொங்கியபடி பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர்

மன்னார்குடியில் படிக்கட்டிலும், பின்பக்க ஏணியிலும் தொங்கியபடி பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

ஆபத்தான பயணம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் நகர பஸ்களில் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் தினசரி அவதிப்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக முத்துப்பேட்டை, திருமக்கோட்டை, களப்பால், தேவங்குடி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டுகள் மற்றும் பஸ்சின் பின்பக்க ஏணியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்று படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதால் சில சமயம் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

கூடுதல் பஸ்கள்

இது தெரிந்தும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பஸ்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

பள்ளி, கல்லூரி நேரங்களில் கூட்ட நெரிசலில் மாணவர்கள் அவதிப்படுவதை தவிர்க்கவும், ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும் மன்னார்குடி மற்றும் கிராமப்புறங்கள் இடையே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் செல்வதை தடுக்காவிட்டால் விபத்துகள் நடைபெறுவதை தடுக்க முடியாது என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேணடும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story