பஸ் பட்டிக்கட்டில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்


பஸ் பட்டிக்கட்டில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் இருந்து சின்னசேலத்துக்கு பஸ் பட்டிக்கட்டில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள் கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வந்த அரசு கலை கல்லூரி கட்டிடத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து சின்னசேலம் அருகே உள்ள டி.எஸ்.எம். கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் இருந்து சின்னசேலத்துக்கு காலை 9 முதல் 10 மணிவரை 2 அரசு டவுன்பஸ்கள் மட்டும் இயக்கப்படுவதால் அரசு கல்லூரிக்கு குறிப்பிட்ட 2 பஸ்களில் தான் அனைத்து மாணவ, மாணவிகளும் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் அந்த 2 பஸ்களிலும் மாணவ-மாணவிகள் கூட்டம் நிரம்பி வழியும். வேறு வழியில்லாமல் சில மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி உயிரை பணயம் வைத்து பயணம் செய்வதை காண முடிகிறது. இப்படி அளவுக்கு அதிகமாக மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும்போது அரசு பஸ்சின் இடது பக்கம் சாய்ந்த படியே செல்கின்றன. இதனால் வழியில் ஏதாவது பள்ளத்தில் பஸ்ஏறி இறங்கினால் விபத்துக்குள்ளாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே மாணவர்கள் நலன் கருதி கல்லூரிக்கு சென்று வர வசதியாக காலை, மாலை நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story