கல்லூரி பருவத்திலேயே மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்


கல்லூரி பருவத்திலேயே மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்
x

கல்லூரி பருவத்திலேயே மாணவ- மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

ராணிப்பேட்டை

கல்லூரி பருவத்திலேயே மாணவ- மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் பெண்ணியம் போற்றுவோம் என்ற தலைப்பில் 181 என்ற தொலைபேசி எண்ணில் பெண்கள் தொடர்பு கொள்ளும் மகளிர் உதவி மையம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

181 மகளிர் உதவி மையம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ரகசிய சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இதன்மூலம் குடும்ப பிரச்சினை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகிறது.

கல்லூரி பருவத்திலேயே...

பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதரவகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டுதெரிந்து கொள்ளலாம். கல்லூரி மாணவ-மாணவிகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கல்லூரி பருவத்திலேயே மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். லட்சியத்தோடு செயல்படவேண்டும். கல்லூரி பருவத்திலேயே எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என தீர்மானிக்கவேண்டும். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மாணவர்கள் துணிவு, தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உறுதி மொழி

பின்னர் கலெக்டர் தலைமையில் மாணவ- மாணவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்ட உதவி, காவல்துறை உதவி, மருத்துவ உதவி, தங்குவதற்கான இட வசதி, மனநல ஆலோசனை மற்றும் குடும்ப நல ஆலோசனை குறித்த துண்டு பிரசுரங்களை கலெக்டர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் சமூக நல அலுவலர் இந்திரா, கல்லூரி முதல்வர் நெடுஞ்செழியன், தமிழ் துறை பேராசிரியர் சேகர், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story