மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்தக்கூடாது


மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்தக்கூடாது
x

மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்தக்கூடாது என உதவி போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

பனப்பாக்கம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் இப்பள்ளிக்கு வருகை தந்து மாணவிகளுடன் உரையாடினார்.

அப்போது அவர் மாணவர்களாகிய நீங்கள் பெற்றோர்களுக்கு கீழ் படிய வேண்டும். போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது. அது உடலுக்கு தீங்கை வரவழைக்கும். பள்ளிக்கு அருகில் யாராவது போதைபொருட்களை விற்றால் உங்கள் ஆசிரியர்களிடமோ அல்லது காவல் துறையிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும். நீங்கள் நன்றாக படித்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்ப்பவர்களாக விளங்கவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஷர்மிளா, நெமிலி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story