பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்


பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்
x

சீர்காழி பகுதியில் போதிய அளவு பஸ் வசதி இல்லாததால் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். இதனால் கூடுதல் பஸ்களை இயக்க ேவண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி பகுதியில் போதிய அளவு பஸ் வசதி இல்லாததால் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். இதனால் கூடுதல் பஸ்களை இயக்க ேவண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான பயணம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிலிருந்து வைத்தீஸ்வரன் கோவில், மணல்மேடு, பந்தநல்லூர் வழியாக கும்பகோணம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பள்ளிகள் முடிந்து மாணவர்கள் பஸ் படிக்கட்டு மற்றும் பஸ்சின் பின்புறம் உள்ள ஏணியில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். போதிய அளவு பஸ்கள் இன்றி கூட்ட நெரிசல் காரணமாக இந்த வழித்தடத்தில் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்கிறார்கள். இதனால் டிைரவர்கள் பஸ்சை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறாா்கள். இந்த வழித்தடத்தில் மாணவர்கள் நலன் கருதி பள்ளி நேரத்தில் மட்டுமாவது கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இது குறித்து இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் மாணவர்கள் கூறியதாவது:-

கூடுதல் பஸ்கள் தேவை

மாணவன் அஜய்: சீர்காழி பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை அரசு இயக்க வேண்டும். கூடுதல் பஸ் வசதி இல்லாததால் தினமும் காலை முன்கூட்டியே பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாலை நேரத்திலும் போதிய அளவு பஸ் இல்லை. இதனால் காலம் தாழ்த்தி வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அனைத்து கிராமங்களுக்கும் அரசு பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கினால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.மாணவன் மணிகண்டன்: எங்கள் பகுதிகளுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் காலை 7 மணிக்கு வீட்டை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் அளவுக்கு அதிகமான பயணிகள் பஸ்சில் ஏற்றப்பட்டால் எங்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் பஸ்கள் சென்று விடுகிறது.இதனால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் குறைவான பஸ்கள் இயக்கப்படுவதால் படிக்கட்டு, ஏணிப்படிகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே அரசு காலை மாலை பள்ளி நேரங்களில் கூடுதல் டவுன் பஸ்ளை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story