3 கிலோ மீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள்
பஸ் வசதி இல்லாததால் 3 கிலோ மீட்டர் தூரம் பள்ளிக்கு மாணவர்கள் நடந்து செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாயில்பட்டி,
பஸ் வசதி இல்லாததால் 3 கிலோ மீட்டர் தூரம் பள்ளிக்கு மாணவர்கள் நடந்து செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ்
சிவகாசியில் இருந்து தாயில்பட்டி வழியாக வெம்பக்கோட்டை, கோட்டைப்பட்டிக்கு காலை 7.30 மணிக்கு வரும் அரசு பஸ் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அடுத்த பஸ் இரவு 7.30 மணிக்கு தான் இயக்கப்படுகிறது.
மற்ற நாட்களில் பஸ்கள் இயக்கப்படாததால் சூரார்பட்டி, அக்கரைப்பட்டி, காமராஜர் காலனி, விளாமரத்துபட்டி, விஜயகரிசல்குளம், துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம், பசும்பொன் நகர், கோதை நாச்சியார்புரம், கலைஞர் காலனி தாயில்பட்டி, கீழ தாயில்பட்டி, பாலம்மாள் காலனி, வெற்றிலையூரணி, தெற்கு அணை கூட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
3 கிலோ மீட்டர்
இ்ந்த கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.
இதனால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிவகாசியில் இருந்து தாயில்பட்டி வழியாக வெம்பக்கோட்டை, கோட்டைப்பட்டி பகுதிக்கு தினமும் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.