18 வயது பூர்த்தியடைந்த மாணவ, மாணவிகள் வாக்காளராக சேர வேண்டும்: கலெக்டர்


18 வயது பூர்த்தியடைந்த மாணவ, மாணவிகள் வாக்காளராக சேர வேண்டும்: கலெக்டர்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்களில், 18 வயது பூர்த்தியடைந்த மாணவ, மாணவிகள் வாக்காளராக சேர வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்களில், 18 வயது பூர்த்தியடைந்த மாணவ, மாணவிகள் வாக்காளராக சேர வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

மக்கள் தொடர்பு முகாம்

திருச்செந்தூர் தாலுகா பள்ளிபத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட வள்ளிவிளை இந்து நாடார் சமுதாய கூடத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். முகாமில், வருவாய்த்துறை, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகளில் இருந்து 119 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 95 லட்சத்து 63 ஆயிரத்து 900 மதிப்பில் தையல் எந்திரம், இலவச வீட்டு மனை பட்டா, செல்போன், விவசாய உபகரணங்கள், மகளிர் சுய உதவி குழு கடன் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

சிறப்பு முகாம்கள்

அப்போது அவர் பேசுகையில், மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்களில் 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் பெயரை இணைத்து கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவ, மாணவிகள் வாக்காளர் பட்டியலில் தங்களை சேர்த்து கொள்ள வேண்டும். இந்தமுகாம்களில் வாக்காளர்கள் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். பொதுமக்கள் அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு மனுக்கள் அளித்தால் தகுதி வாய்ந்தவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படும். தங்களது குறைகளை மனுக்களாக அளித்தால், தீர்வு கண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே மக்கள் தொடர்பு முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும், என்றார்.

பின்னர் கலெக்டர் வள்ளிவிளை ரேஷன் கடை, கிளை அஞ்சலகம், பொது நூலகம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிபத்து பஞ்சாயத்து அலுவலக கட்டடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வள்ளிவிளை அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

கலந்து ெகாண்டவர்கள்

முகாமில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், கானம் நகர பஞ்சாயத்து தலைவர் வெங்கடேஸ்வரி, பள்ளிபத்து பஞ்சாயத்து துணை தலைவர் நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story