சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்


சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்
x

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு வாழ்த்தினார்.

வேலூர்

சேலம் மாவட்டம் மல்லூர் அரசுப்பள்ளியில் கடந்த 25-ந் தேதி தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரி, அன்னங்குடிமேடு, திருமணி ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் 12 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு பிரிகளில் நடந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தனர். இதனையடுத்து அவர்கள் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனை சந்தித்தனர். அவர் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் சுரேஷ் ஆகியோரை வாழ்த்தி, பாராட்டினார்.


Next Story