பல்வேறு போட்டிகளில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வெற்றி
பல்வேறு போட்டிகளில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
காரைக்குடி,
அழகப்பா அரசு கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவர்கள் அழகப்பா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு குறுக்கெழுத்து மற்றும் நடனம், வேகமாக தட்டச்சு செய்தல் போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றனர். இதில் கணினி பயன்பாட்டியல் மாணவி சாருமதி நடன போட்டியில் முதல் பரிசையும், வேகமாக தட்டச்சு செய்தல் போட்டியில் கணினி பயன்பாட்டியல் மாணவி ஜாஸ்பர் மெர்லின் 2-வது பரிசையும், கணினி அறிவியல் தொடர்பான இலக்கை குறி வைத்தல் மற்றும் குறுக்கெழுத்து போட்டியில் கணினி அறிவியல் துறை 3-வது ஆண்டு மாணவர்கள் சூரியகுமார், ரஞ்சித், லோகநாதன், சாத்தையா ஆகியோர் முதல் 2 இடங்களையும் பெற்றனர். இந்த போட்டியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் 24 கல்லூரிகளில் இருந்து மொத்தம் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் முதல்வர் பெத்தாலெட்சுமி, கணினி அறிவியல் துறைத்தலைவர் சந்திரசேகரன், பேராசிரியர்கள் பாராட்டினர்.