ஆய்வு


ஆய்வு
x

வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் கிராமத்தில் நாகை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பரிமேல் அழகன்தோட்டக்கலை பயிர்களான மா, சாமந்தி, மிளகாய், கத்தரி, கொத்தவரை ஆகியவை சாகுபடி செய்யபட்ட விவசாயிகளின் வயல்களை ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். ஆய்வின் போது தோட்டக்கலை உதவி இயக்குனர் நீதிமாணிக்கம், தோட்டக்கலை துணை அலுவலர் சிவராமகிருஷ்ணன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயக்குமார், தீபா உள்ளிட்ட தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story