நெடுஞ்சாலை பணிகளை இயக்குனர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை பணிகளை இயக்குனர் ஆய்வு செய்தார்.
தர்மபுரி
நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆய்வு செய்தார். பாலக்கோடு- நாகதாசம்பட்டி, பெரியாம்பட்டி-பேகாரஅள்ளி, ஜொல்லம்பட்டி- கீரியூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்றுவரும் சாலை பணிகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது தரம் குறித்து அவர் ஆய்வு செய்ததுடன் இந்த சாலை பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர்கள் சுரேஷ், அருள்மொழி, கோட்ட பொறியாளர்கள் தனசேகரன், சரவணன், சேலம் நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன், உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story