குழந்தைகள் மரத்தடியில் படிக்கும் அவலம்


குழந்தைகள் மரத்தடியில் படிக்கும் அவலம்
x

குழந்தைகள் மரத்தடியில் படிக்கும் அவலம் தொடர்கிறது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி கட்டிடம் முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முன்பு 20 குழந்தைகளுடன் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் 2016-ல் கட்டப்பட்டது. கடந்த சில நாட்களாக இந்த கட்டிட தூண்கள் வலு இழந்தும், தரைகள் முழுவதும் உடைந்து குழந்தைகள் தங்கி படிக்க முடியாத அளவில் இருந்து வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்து இருந்த நிலையில் தற்போது குழந்தைகளை அங்கன்வாடி அருகில் இருக்கும் மரத்தடியில் வைத்து அங்கன்வாடி ஊழியர் பாடம் சொல்லி தரும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே உடனடியாக மாற்று இடம் அல்லது கட்டிடத்தை பழுது நீக்கி தர வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story