உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் ஆய்வு
உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டம், 14-மற்றும் 15-வது மானிய நிதி குழு திட்ட பணிகள், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த திட்ட பணிகள் குறித்தும், திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேணா ஐ.ஏ.எஸ். மற்றும் அதிகாரிகள் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது நடைபெற்று வரும் பணிகள், முடிவற்ற பணிகள் குறித்த விவரங்களை சரிபார்த்தார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமணன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், அலுவலக மேலாளர் ஜெயஸ்ரீ, ஒன்றிய பொறியாளர்கள் இளங்கோ, மஞ்சுளா ஆகியோர் உடனிருந்தனர்.