மானாமதுரையில், வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
மானாமதுரை
மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் நகரமன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் சக்திவேல், நகராட்சி கவுன்சிலர் அழகர்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
மானாமதுரை பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருசக்கரவாகன நிறுத்தம் தொடர்பாக ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story