குளிர்பதன தானிய கிடங்கில் கலெக்டர் ஆய்வு


குளிர்பதன தானிய கிடங்கில் கலெக்டர் ஆய்வு
x

நாமகிரிப்பேட்டையில் குளிர் பதன தானிய கிடங்கை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்

கலெக்டர் ஆய்வு

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலப்பள்ளிபட்டியில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் விவசாயி ஆண்டி என்பவரால் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மானியம், வேளாண் அலுவலர்கள் மேற்கொண்டு நடவடிக்கைகள் மற்றும் கிடைக்கப் பெற்ற பயன்கள் குறித்த விவரங்களை விவசாயிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

அதேபோல் நாவல்பட்டியில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடியுடன் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனிவளர்ப்பு உள்ளிட்ட பண்ணையும் சார்ந்த தொழிலை மேற்கொண்டு வரும் விவசாயி செல்லபாபுவிடம் விவசாய நடைமுறைகளை விரிவாக கேட்டறிந்தார்.

குளிர் பதனகிடங்கு

அதைத்தொடர்ந்து நாமகிரிப்பேட்டையில் உள்ள 25 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன தானியகிடங்கையும், ஏல கொட்டகையையும் கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டார். பின்னர் அதன் செயல்பாடுகள் குறித்து அலுவலரிடம் அவர் விரிவாக கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குனர் துரைசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், உதவி இயக்குனர் (வேளாண்மை) உமா, தாசில்தார் சுரேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story