கீழடி அகழ்வைப்பக கட்டிட பணி நிறைவு-சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு
கீழடி அகழ்வைப்பக கட்டிட பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அந்த பணிகளை சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்புவனம்
கீழடி அகழ்வைப்பக கட்டிட பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அந்த பணிகளை சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் நேரில் ஆய்வு செய்தார்.
முதன்மை செயலாளர் ஆய்வு
தமிழர்களின் நாகரிகம் முன்னோடி என்பதை எடுத்துரைக்கும் விதமாக சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி விளங்குகிறது. அங்கு இதுவரை 8 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த அகழாய்வில் கிைடத்த தொல்பொருட்கள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என தெரியவந்துள்ளது.
அங்கு கண்ெடடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த ரூ.11 கோடியில் செட்டிநாட்டு கட்டுமான தொழில்நுட்பத்தில் அகழ் வைப்பகம் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.
அதில் அகழாய்வு தொல்பொருட்களை அடுக்கி காட்சிப்படுத்துவது குறித்து சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
அகழ்வைப்பக பணி நிறைவு
பின்னர் முதன்மை செயலாளர் சந்திரமோகன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் கூறியதாவது:-
வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில், நமது சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்கின்ற வகையில், அகழ் வைப்பக பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது. அகழாய்வின் போது கிடைக்கப் பெற்ற தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த ஆய்வின் போது தொல்லியல் ஆணையர் சிவானந்தம், கீழடி கட்டிட மைய செயற்பொறியாளர் மணிகண்டன், கீழடி அகழாய்வு இணை இயக்குனர் ரமேஷ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.