ஞாலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் இடத்தை மாநில ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் ஆய்வு
ஞாலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் இடத்தை மாநில ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
அழகியபாண்டியபுரம்,
ஞாலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் இடத்தை மாநில ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
முதன்மை செயலாளர் ஆய்வு
தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஞாலம் ஊராட்சியில் நைனார் பொற்றை பகுதியில் தமிழக முதல்-அமைச்சரின் நிலமற்ற ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று காலையில் அந்த இடத்தை மாநில ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வீடுகள் தேர்வு செய்யும் பொதுமக்களிடம் கருத்து கேட்டார். பின்னர் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 7 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையினை வழங்கினார். அதைதொடர்ந்து அந்தரபுரத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான கூட்டமைப்பு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்து சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட திட்ட அலுவலர் தனபதி, மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல் பெர்டனஸ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஏசுதாஸ் பூதலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ், வட்டார வளர்ச்சி (ஊராட்சிகள்) அதிகாரி இங்கர்சால், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.