வாழ்ந்து காட்டுவோம் திட்ட கள ஆய்வு கூட்டம்
நடுவக்குறிச்சி கிராமத்தில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட கள ஆய்வு கூட்டம் நடந்தது.
பனவடலிசத்திரம்:
மேலநீலிதநல்லூர் ஒன்றியம் நடுவக்குறிச்சி மேஜர் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயலாக்கம் மற்றும் களஆய்வு குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் நடுவக்குறிச்சி மேஜர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் குருநாதன். வட்டார உதவி திட்ட அலுவலர்கள் ஜெய்கணேஷ். முருகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வட்டார உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் வரவேற்று பேசினார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாநில இணை இயக்குனர் வி.பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் வட்டார மைய இயக்க மேலாளர் காளிச்சாமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி, செல்வம் மற்றும் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர்கள், மாவட்ட மற்றும் வட்டார மேலாண்மை அளவீட்டு கணக்கர்கள், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.