ஊராட்சி செயலாளர்களுக்கான ஆய்வு கூட்டம்


ஊராட்சி செயலாளர்களுக்கான ஆய்வு கூட்டம்
x

கீழ்பென்னாத்தூரில் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி செயலாளர்களுக்கான திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன், ஒன்றிய பொறியாளர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்பாபு (தணிக்கை), சுபாஷினி (திட்டம்) மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும் அனைத்து திட்டப்பணிகளையும் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்பட்டது. மேலும் அனைத்து பதிவேடுகளும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Next Story