வானூரில்வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்கலெக்டர் தலைமையில் நடைபெற்றது


வானூரில்வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வானூரில் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர், விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகைதந்து பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசுத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப்பணிகளையும் சிறப்பான முறையில் மேற்கொள்வதோடு உரிய காலத்தில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

பணிகளை விரைந்து முடிக்க

அதனடிப்படையில் வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், பொது நிதி, பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, 15-வது நிதிக்குழுவின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கவும், பணிகள் நடைபெறும் சமயத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு பணிகள் தரமான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அலுவலக பணி சார்ந்த கோப்புகளையும், உரிய முறையில் பராமரித்து, அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், வானூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உஷா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story