வந்தவாசியில் சுடுகாட்டுக்கு செல்ல ஏரிக்கரை மீது தார் சாலை அமைப்பது குறித்து ஆய்வு
வந்தவாசியில் சுடுகாட்டுக்கு செல்ல ஏரிக்கரை மீது தார் சாலை அமைப்பது குறித்து ஆய்வு நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியில் சுடுகாட்டுக்கு செல்ல ஏரிக்கரை மீது தார் சாலை அமைப்பது குறித்து ஆய்வு நடந்தது.
வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 1,2-வது மற்றும் 3 வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்தவாசி ஏரியை கடந்து உள்ள சுடுகாட்டினை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுடுகாட்டுக்கு ஏரிக்கரை மீதுதான் செல்ல வேண்டும். ஏரிக்கரையில் முட் புதர் உள்ளதால் பிணத்தை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுவதால் சாலை அமைக்க வேண்டி அப்பகுதி கவுன்சிலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் 15-வது மானிய நிதி குழு திட்டத்தின் மூலமாக ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்க கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒப்பந்தம் கோரப்பட்டது.
2-வது வார்டு கவுன்சிலர் ஷீலா மூவேந்தன், 1.20 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையில் சுடுகாட்டின் கடைசி பகுதியில் மட்டும் அமைத்தால் எப்படி செல்ல முடியும் என கூறி ஒப்பந்தம் கோறியதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
சுடுகாட்டுக்கு செல்லும் பாதை என்பதால் 1.20 கிலோமீட்டர் தூரம் முழுவதும் சாலை அமைக்க நிதி ஒதுக்குமாறு கோரினர். நமக்கு நாமே திட்டம் மூலமாக அங்கு சாலை அமைக்க ஏற்பாடு செய்ய அதற்கான ஆரம்ப கட்ட பணியை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று நகராட்சித் ஆணையாளர் (பொறுப்பு) பி.சரவணன், பணி மேற்பார்வையாளர் மணி ஆகியோர் ஏரிக்கரையில் சென்று இடத்தினை ஆய்வு செய்தனர். தார் சாலை அமைக்கலாமா அல்லது பேவர் பிளாக் சாலையாக மாற்றலாமா என ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் ஜலால், மற்றும் கவுன்சிலர்கள், அன்பரசு, கிஷோர்குமார், நூர் முகம்மது உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
=============