போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை


போதைப்பொருள் விற்பவர்கள்   மீது கடும் நடவடிக்கை
x
திருப்பூர்


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய மாணவர் கழகத்தினர் நேற்று மனு கொடுத்தனர். அந்த மனுவில், சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களை குறி வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் மாணவர்கள் தங்களுடைய உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள்.

இதைத்தடுக்க காவல்துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி துறைகள் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மற்றும் அதன் தீமைகள் குறித்து அனைத்து கல்வி நிலையங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Next Story