மாணவி தற்கொலை
http://cmsadmin.dailythanthi.com/main.ஜே
வீரபாண்டி:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் கோபி (வயது47). இவர் திருப்பூர் முருகம்பாளையம் பாரக்காடு பகுதியில் தனது மனைவி மற்றும் 3 மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் முத்துமாரி (17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரியில் சேருவதற்காக காத்திருந்தார். இந்நிலையில் பெற்றோர் தனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதாக தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, தன்னை திருப்பூரில் உள்ள கல்லூரியில் சேர்க்குமாறு பெற்றோரிடம் முத்துமாரி கடந்த ஒரு வாரமாக கூறி வந்ததாக தெரிகிறது. ஆனால் பெற்றோர் தனது சொந்த ஊரில் கல்லூரியில் சேர்ப்பதற்கு மும்முரம் காட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த முத்துமாரி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.sp#