மாசிக்கொடைவிழா ஏற்பாடுகளை சப்-கலெக்டர் ஆய்வு


மாசிக்கொடைவிழா ஏற்பாடுகளை சப்-கலெக்டர் ஆய்வு
x

மாசிக்கொடைவிழா ஏற்பாடுகளை சப்-கலெக்டர் ஆய்வு

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வருகிற 5-ந் தேதி மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 14-ந் தேதி ஒடுக்குப்பூஜையுடன் விழா நிறைவடைகிறது. கொடியேற்றத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் நேற்று மண்டைக்காடுக்கு நேரில் சென்று விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவர் கோவில் வளாகம், பொங்கலிடும் பகுதி, சமய மாநாடு திடல் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பக்தர்களுக்கு செய்து வரும் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கல்குளம் தாசில்தார் கண்ணன், குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்துபாண்டி, மண்டைக்காடு கிராம நிர்வாக அலுவலர் திவ்யா, பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலாவதி, யேசுபாலன், சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story