இரு கிராமத்தினர் இடையே மோதலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர்


இரு கிராமத்தினர் இடையே மோதலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர்
x

இரு கிராமத்தினர் இடையே மோதலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே விளங்களத்தூரில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் விளங்களத்தூர-் கீழக்கன்னிசேரி ஆகிய கிராமங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இரு கிராமங்களில் சேர்ந்த 500 பேர் மீது முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் இரு கிராமங்கள் மோதிக்கொண்ட போது சாமர்த்தியமாக முதுகுளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை மேலே தூக்கி மிரட்டி கூட்டத்தை கலைத்தார். இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் இன்ஸ்பெக்டர் செல்வத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Next Story