சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெறும் மையங்களை வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெறும் மையங்களை வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு
x

வாணியம்பாடியில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெறும் மையங்களை வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தகுதி மற்றும் எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, இஸ்லாமியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஆகிய 3 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. 3,164 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

இந்த தேர்ரு மையங்களை திருப்பத்தூர் மாவட்ட தேர்வு மைய மேற்பார்வையாளர், வடக்கு மண்டல ஐ.ஜி. ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு மாவட்டம் முழுவதும் இருந்து வரவழைக்கப்பட்ட போலீசாருக்கு தேர்வுகளை நடத்துவது எப்படி எனவும், அதன் வழி முறைகள் குறித்தும் தேர்வுகளை தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். அங்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், அருண் குமார், ஜெயலட்சுமி உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story