சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம்


சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம்
x

சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடந்தது

மதுரை

சோழவந்தான்

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் சுப்பிரமணி சுவாமிக்கு கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று காலை பாவாடை தரிசனம் நடந்தது. சுப்பிரமணியசுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் கிருஷ்ணன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் வாணவேடிக்கையுடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.கிருஷ்ணமூர்த்திவாத்தியார் தலைமையில் யாகவேள்வி நடந்தது.நாகேஸ்வரன் பட்டர் மாப்பிள்ளை வீட்டார் ஆகவும், பிரகாஷ் பெண்வீட்டார் ஆக இருந்து முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.இதில் செயல் அலுவலர் பாலமுருகன், ஆலயப் பணியாளர்கள், தொழிலதிபர் செந்தில்குமார் மற்றும் பிரதோஷ கமிட்டியினர், பக்தர்கள் கலந்துகொண்டனர். சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலிலும் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.


Next Story