உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத் தொகை


உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத் தொகை
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி யூனியனில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத் தொகை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

தென்திருப்பேரையில் உள்ள ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் 7 குழுக்களுக்கு தலா 75 ஆயிரம் வீதம் மானியத் தொகைக்கான ஆணையை யூனியன் தலைவர் ஜனகர் வழங்கினார். நிகழ்ச்சிக்கு யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலர் செல்வகுமார் ராதா, இளநிலை அலுவலர் நிவேதிதா, வாழ்வாதார இயக்க அலுவலர்கள் மெல்வின் கரோலின், சரவணன் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story