ஆதிதிராவிட விவசாயிகள் நிலம் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிட விவசாயிகள் நிலம் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) 2022-23-ம் நிதியாண்டுக்கு தாட்கோ திட்டம் மூலம் 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 4 பேருக்கு ரூ.20 லட்சம் மானியமும், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவருக்கு ரூ.5 லட்சம் மானியமும் என மொத்தம் 5 பேருக்கு ரூ.25 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மகளிர் இல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகள்களுக்கு வழங்கப்படும். 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். விவசாய கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம். குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக்கூடாது.
ஒருவர் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவர்கள். மேலும் விவரங்களுக்கு www.application.tahdco.com என்ற இணைதயதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். மாவட்ட மேலாளர் அலுவலகம், அறை எண்.501, 5-வது தளம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரியிலும், 0421 2971112 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
----