நிலமற்ற ஆதிதிராவிட விவசாயிகள் வேளாண்மை நிலம் வாங்க மானியம்


நிலமற்ற ஆதிதிராவிட விவசாயிகள் வேளாண்மை நிலம் வாங்க மானியம்
x

நிலமற்ற ஆதிதிராவிட விவசாயிகள் ரேளாண்மை நிலம் வாங்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

நிலமற்ற ஆதிதிராவிட விவசாயிகள் ரேளாண்மை நிலம் வாங்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நிலம் வாங்க மானியம்

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 ஆதிதிராவிடர்களுக்கும், ஒரு பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு வேளாண்மை நிலம் வாங்க தலா ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும்.

இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மகளிர் அல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். தாட்கோ திட்டத்தில் ஏற்கனவே மானியம் பெற்றிருக்கக் கூடாது.

அதிகபட்சம் ரூ.5 லட்சம்

வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்ய வேணடும். நிலத்தை விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிக பட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன் பெற ஆதிதிராவிடர்கள் http://application.tahdco.com/ என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் http://fast.tahdco.com/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகம், ஏ-பிளாக், 5-ஆம் தளம், கலெக்டர் அலுவலகம் திருப்பத்தூர் என்ற முகவரியில் நேரில் அல்லது தொலைபேசி எண் 7448828517 மூலம் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story