சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு மானியம் கலெக்டர் தகவல்


சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு மானியம் கலெக்டர் தகவல்
x

வேலூர் மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சுய தொழில்

வேலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

படித்த மற்றும் படிக்காத வேலைவாய்ப்பற்ற, சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவிற்கு ரூ.50 லட்சம், சேவை மற்றும் வியாபாரத்திற்கு ரூ.20 லட்சம் என கடன் உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை பிரிவின் கீழ் ரூ.5 லட்சத்திற்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொது பிரிவு விண்ணப்பதாரர்கள் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், திருநங்கை, முன்னாள் படை வீரர்கள், சிறுபான்மையினர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் சொந்த பங்களிப்பு செய்ய வேண்டும்.

மானியம்

இத்திட்டத்தில் கடன் பெறும் பொது பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 25 சதவீதம் மற்றும் இதர சிறப்பு பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://www.Kviconline.gov.in/ pmegpeportal/jsp/pmegponline.jsp -என்ற வலைதள முகவரியில் ஆதார்அட்டை, திட்ட அறிக்கை, விலை பட்டியல் (ஜி.எஸ்.டி. எண் உடன்), சாதி சான்றிதழ், படிப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் போன்ற ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு காட்பாடி, காங்கேயநல்லூரில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story