சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம்வேளாண் அதிகாரி தகவல்
சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் அளிக்கப்படும் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளாா்.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் வித்யா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
விருத்தாசலம் வட்டாரத்தில், தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 1 ஹெக்டேருக்கு சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.
எனவே இதன் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், விருத்தாசலம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில் அமைந்துள்ள தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு, மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story