வாகன ஓட்டும் பெண் தொழிலாளர்களுக்கு மானிய நிதியுதவி
நலவாரியத்தில் பதிவு செய்துள்ள வாகன ஓட்டும் பெண் தொழிலாளர்களுக்கு மானிய நிதியுதவி வழங்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு, ஓட்டுனர் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஓட்டுனர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் உறுப்பினர்களுக்கு புதிதாக பயணியர் ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானிய நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த பெண் உறுப்பினர்கள் https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியே விண்ணப்பித்து பயன்அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதுவரை தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யாத ஓட்டுனர்கள், புதிதாக பதிவு செய்து, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், குழந்தைகளுக்கு கல்விஉதவி, திருமணஉதவி ஆகிய நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் அடையலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.